LIGER D Logo Top
www.garudabazaar.com

'LIGER' முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடி ரூபாயா? மாஸ் சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Liger vijay Deverakonda delivers 33 Cr WW GROSS on DAY 1

Also Read | சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்.. வெளியான முதல் நாள் ஷூட்டிங் பூஜை வீடியோ!

லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  நேற்று (ஆகஸ்ட் 25, 2022)  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed)  படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த  படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Liger vijay Deverakonda delivers 33 Cr WW GROSS on DAY 1

படத்தில் 7 சண்டை காட்சிகளும் 6 பாடல் காட்சிகளும் உள்ளன. ஆக்சன் காட்சிகளுடன் ஜனரஞ்சகமான படமாக இந்த படம் வெளியாகி உள்ளது.

இந்த அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார். பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Liger vijay Deverakonda delivers 33 Cr WW GROSS on DAY 1

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர்  ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். இந்த படம் தமிழகம் முழுவதும்  400 திரைகளில் வெளியாகி உள்ளது என வினியோகஸ்தர் ஆர்.கே. சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Liger vijay Deverakonda delivers 33 Cr WW GROSS on DAY 1

இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலாக 33.12 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. விஜய் தேவரகொண்டா நடித்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக லைகர் உருவாகி உள்ளது.

Also Read | நானி நடிக்கும் புதிய PAN INDIA படம்.. சில்க் ஸ்மிதா போட்டோவுடன் வெளிவந்த ரிலீஸ் தேதி போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Liger vijay Deverakonda delivers 33 Cr WW GROSS on DAY 1

People looking for online information on Ananya Panday, Liger, Liger Movie Box Office Collections, Vijay Deverakonda will find this news story useful.