Battery
The Legend
www.garudabazaar.com

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'LIGER'.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நடிகர்! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கும் LIGER (Saala Crossbreed) திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Devarakonda LIGER Saala Crossbreed Movie Tamil Nadu Rights

Also Read | BREAKING: விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. மதுரைல எங்கே நடக்குது? முழு தகவல்

விஜய் தேவரகொண்டா நடித்த மாஸ் பொழுதுபோக்கு எண்டர்டெய்னரான  லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படத்தின் டீஸர், போஸ்டர்கள் சிங்கிள் பாடல்கள், டிரெய்லர் ஏற்கனவே படத்தின் மீது எதிர்பார்ப்பை  அதிகரித்துள்ளது.

பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் இந்த, அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

Vijay Devarakonda LIGER Saala Crossbreed Movie Tamil Nadu Rights

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இனைந்து இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

Vijay Devarakonda LIGER Saala Crossbreed Movie Tamil Nadu Rights

இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Vijay Devarakonda LIGER Saala Crossbreed Movie Tamil Nadu Rights

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர்  ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | Life of Pazham: அனிருத் குரலில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அடுத்த சிங்கிள்.. செம்ம!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda LIGER Saala Crossbreed Movie Tamil Nadu Rights

People looking for online information on Liger Movie, LIGER Saala Crossbreed Movie, Vijay Devarakonda will find this news story useful.