www.garudabazaar.com

விஜய் தேவரகொண்டா & அனன்யா செம மாஸ் நடனம்.. வெளியான 'LIGER' சிங்கிள் பாடல் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள LIGER (Saala Crossbreed) படத்தின் முழு படப்பிடிப்பு  பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Akdi Pakdi Liger Official Video Teaser Vijay Deverakonda Ananya Panday

Also Read | பழைய டிரெண்டை மீண்டும் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், இயக்கும் இத்திரைப்படத்தின் மூலம்  உலகப்புகழ் குத்து சண்டை வீரர் மைக் டைசன் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். மைக் டைசன் இப்படத்தில் ஒரு அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவையும் மைக் டைசனையும்  இணைந்து திரையில் காண்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். பெரிய திரையில் உண்மையான ஆக்சன் அதிரடியை காண திரை ரசிகர்கள் பெரும்  ஆவலுடன்  காத்திருக்கின்றனர்.

Akdi Pakdi Liger Official Video Teaser Vijay Deverakonda Ananya Panday

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இனைந்து இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். பூரி ஜெகநாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் "அக்டி பக்டி' பாடலின் டீசர் வீடியோ வெளியாகி உள்ளது. டீசரில் விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டேவின் நடனம் ஹைலைட்டாக அமைந்துள்ளது. ஜூலை 11 மாலை 4 மணிக்கு இந்த பாடல் வெளியாக உள்ளது.

Akdi Pakdi Liger Official Video Teaser Vijay Deverakonda Ananya Panday

இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் பன்மொழி இந்தியா திரைப்படமான ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்.. விக்ரமின் அதிரடி வசனம்.. ஜெயம் ரவி & கார்த்தியின் MASS LOOK!

விஜய் தேவரகொண்டா & அனன்யா செம மாஸ் நடனம்.. வெளியான 'LIGER' சிங்கிள் பாடல் டீசர்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Akdi Pakdi Liger Official Video Teaser Vijay Deverakonda Ananya Panday

People looking for online information on Ananya Panday, Liger Akdi Pakdi song, Liger Movie, Vijay Deverakonda will find this news story useful.