Viruman Logo Top
www.garudabazaar.com

33 வகை உணவுகளுடன் பாகுபலி மீல்ஸ்.. வேற மாரி சாப்பிட்ட விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே பாகுபலி மீல்ஸ் உண்ட நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Vijay Devarakonda Ananya Panday Ate Bahubali Thali in Gujarat

Also Read | A.R. ரஹ்மானுடன் நடிகர் நெப்போலியன் சந்திப்பு.. இதான் காரணமா? அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்!

விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடித்த லைகர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் இந்த, அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

Vijay Devarakonda Ananya Panday Ate Bahubali Thali in Gujarat

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Vijay Devarakonda Ananya Panday Ate Bahubali Thali in Gujarat

அதனை முன்னிட்டு படக்குழு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக படக்குழு குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகின்றனர். அகமதாபாத் நகரில் பிரசித்தி பெற்ற 33 வகை உணவுகளுடன் பாகுபலி மீல்ஸ் தாளி உணவை விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து நடிகை அனன்யா பாண்டே சாப்பிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன. இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா பகிர்ந்துள்ளார். அகமதாபாத் நகரை அடுத்து வதோதரா நகருக்கு படக்குழு சென்றனர். அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Vijay Devarakonda Ananya Panday Ate Bahubali Thali in Gujarat

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர்  ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Devarakonda Ananya Panday Ate Bahubali Thali in Gujarat

இந்த லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படம் ஏற்கனவே சென்சாராகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும்  படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தில் 7 சண்டை காட்சிகளும் 6 பாடல் காட்சிகளும் உள்ளன என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Vijay Devarakonda Ananya Panday Ate Bahubali Thali in Gujarat

Also Read | வார நாட்களில் மாஸ் காட்டும் 'சீதா ராமம்'.. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் BOX OFFICE வசூல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda Ananya Panday Ate Bahubali Thali in Gujarat

People looking for online information on Ananya Panday, Bahubali Thali, Gujarat, Vijay Devarakonda will find this news story useful.