"இந்த குற்ற உணர்வுலதான் Hey Ram எடுத்தேன்".. "22 வருஷத்துக்கு முன் வந்த பயம்".. கமல் பரபரப்பு பேச்சு!
முகப்பு > சினிமா செய்திகள்'ஹே ராம்' படம் எடுத்ததற்கு பின்னணியில் உள்ள காரணம் குறித்து கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவில் பேசியுள்ளார்.
கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.
மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் கமல்ஹாசன் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார். கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு கருத்தரங்குகளில் அவ்வப்போது கமல்ஹாசன் கலந்து கொண்டு வருகிறார்.
கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
மேலும் கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' கட்சி சார்பில் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 'நானும் தலைவன் நீயும் தலைவன்' எனும் நிகழ்வில் கட்சித் தொண்டர்கள் முன் உரையாற்றினார். "போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்" என்ற பதாகையின் முன் நின்று கமல்ஹாசன் உரையாற்றினார். இந்த உரையில் பல விடயங்கள் குறித்து குறிப்பாக அரசியல், வரலாறு, மானுடவியல், மதம், சினிமா, திராவிட இயக்கத்தில் சினிமா, பௌத்தம், காந்தியம் குறித்து பேசினார்.
இந்த விழாவில் ஹே ராம் படம் குறித்தும் கமல் பேசினார். தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் கொண்டாடப்படும் மிக முக்கிய படைப்பு ஹே ராம். காந்தியிசத்தை அடிப்படையாக கொண்டு வரலாற்று புனைவை இயக்குனர் கமல் ஹே ராமில் அமைத்திருப்பார். இந்த படத்தின் கலை இயக்கம், ஒளிப்பதிவு, இயக்கத்தில் உண்மைக்கு நெருக்கமாக ஹே ராம் படத்தை கமல் படைத்திருப்பார்.
இது தமிழ் படமல்ல... இந்தியப்படம் என சொல்லியே கமல் இந்த ஹே ராம் படத்தை வெளியிட்டார். இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி, அதுல் குல்கர்னி, ஹேம மாலினி, கிரீஷ் கர்னாட், நசிருதீன் ஷா, வசுந்தரா தாஸ் நடித்திருந்தனர். கமல்ஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார்.
இசைஞானி இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான பரிந்துரை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹேராம், அந்த ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், " என் அப்பா சொல்லிக்கொடுத்து காந்தி எனும் வார்த்தை என்னுடைய நாவில் வரவில்லை. எல்லோரையும்போல ஒருமையில் பேசக்கூடிய அறிவிலியாகத்தான் நானும் இருந்தேன். அவரா வாங்கிக்கொடுத்தாரு சுதந்திரம்? மீதிப்பேர் எல்லாம் என்ன செஞ்சுட்டு இருந்தாங்க என சவுகரியமாக கேட்க முடியும். ஆனால், நான் வாங்கிக்கொடுத்தேன் என அவர் எங்கேயுமே சொல்லவில்லை.
ஒவ்வொருவருமே சத்தியாகிரகியாக வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். அப்படி நிகழ்ந்தது தான் இந்த சுதந்திர போராட்டம். ஆனால், அந்த காந்தியார் எதெதெல்லாம் நடக்க கூடாது என்று பயந்துகொண்டு இருந்தாரோ அவையெல்லாம் 75 ஆண்டுகளில் அரங்கேற்றி இருக்கிறோம் நாம். அதற்கு மாற்றாக சட்டையை திறந்துகொண்டு கவசமில்லாமல் களமிறங்கி இருக்கிறேன் நான். நீங்களும் அவ்வாறு இருக்க வேண்டும்" என்றார்.
மேலும் ஹே ராம் படம் குறித்து பேசிய கமல்ஹாசன், "நான் 'ஹே ராம்' என்ற படம் எடுக்க காரணமே எனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்வு. இவ்வளவு உழைத்து இதை ஒரு நாடாக திருத்தி செதுக்கி கொடுத்ததை நமக்கு வைத்திருக்க தெரியலையே என்ற வருத்தம். இப்படியெல்லாம் நிகழும் என்ற பயம் காந்திக்கு பிறகு தான் எனக்கு வந்தது என்றாலும் வந்துவிட்டது. 22 வருடங்களுக்கு முன் வந்த பயத்தின் விளைவு தான் 'ஹே ராம்'. 'ஹே ராம்' படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது இப்போது நடந்து கொண்டிருக்கிறது" என கமல்ஹாசன் பேசினார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Kamal Haasan Get Angry With Language Issue In Biggboss House
- Team KH234 Maniratnam Met Kamal Haasan With Udhayanidhi Stalin
- Kamal Haasan Dance With Bindu Madhavi At His Birthday Day Party
- Kamal Haasan Birthday Indian 2 Movie Special Poster
- Actor Padmashree Kamal Haasan 68th Birthday 2022 Nov 7
- Udhayanidhi About Kamal Haasan Maniratnam KH234
- Kamal Haasan And Mani Ratnam Reunite After 35 Years KH234
- Kamal Haasan Vikram Movie 100th Day Function Details
- Kamal Haasan With Lokesh Kanagaraj Diwali Celebration Photo
- Indian 2 Kamal Haasan New Look In Biggboss Season 6
- Kamal Haasan BIGGBOSS Season 6 Tamil Contestant G P Muthu Sources
- Kamal Haasan Will Watching Ponniyin Selvan Movie In IMAX 3D With PS1 Cast
தொடர்புடைய இணைப்புகள்
- അച്ഛനും മകളും ഒരേ വേദിയിൽ പാടിതകർത്തപ്പോൾ !!❤️🤣❤️ Kamal Hassan & Shruti Hassan Singing
- நாயகன் மீண்டும் வரார் 🔥🔥 35 வருடம் கழித்து மீண்டும் Maniratnam இயக்கத்தில் உலக நாயகன் Kamal Haasan 🔥
- "Kamal Haasan കാരണം അങ്ങനെ കുറച്ച് ബുദ്ധിമുട്ട് എനിക്കുണ്ടായിട്ടുണ്ട് !!" | MG Soman's Wife Reveals
- "வயசுக்கு வரதுக்கு முன்னாடியே" 🤣 Kovai Sarala-ன் Atrocities 😂 போட்டு உடைத்த Bhagyaraj 🥳 Sembi
- "Kamal Sir Support இருந்தா தோல்வியே கிடையாது, அதுக்கு நானே சாட்சி" .. KS RAVIKUMAR Speech
- "KAMAL Sir இருக்கும் போது நான் பேசவே தகுதி இல்லனு..." ASHWIN Emotional Speech
- സോമേട്ടന് കൊച്ചുകുട്ടികൾ മുതൽ വയസ്സായവർ വരെ നല്ല കൂട്ടാണ് .| MG Soman-ൻ്റെ കുടുംബം
- MG Soman-ൻ്റെ കുടുംബം L വർഷങ്ങൾക്ക് ശേഷമുള്ള ആദ്യത്തെ Interview
- Vijay Sethupathi-க்கு Villain-ஆ Sivakarthikeyan🤩 #shorts #sivakarthikeyan #prince
- GP முத்து கிட்ட மாட்டிக்கிட்ட Bigg Boss 🤣 மனுஷன் Letter படிக்காம எப்படி இருக்க போறாரு?
- MSV-எ பார்த்தா சந்தோசமா இருக்கும், ILAYARAJA பார்த்தா பயமா இருக்கும்... KAMAL HAASAN Speech
- 🔴LIVE: Rockstar DSP's 'O Penne' Music Video Launch| KAMAL HAASAN| DEVI SRI PRASAD