www.garudabazaar.com
iTechUS

"லியோ விஜய், Loki, கெளதம் மேனன்".. அட, இந்த மலையாள நடிகர் வேற கூட இருக்காரே.. Trending Pic!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் முன்பு நடித்திருந்த 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், லியோ படத்தையும் இயக்குகிறார்.

Leo Vijay Lokesh kanagaraj GVM in Shooting spot pic

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிக் பாஸ் வீட்டுக்குள்ளயே அசிம்க்கு வந்த மிரட்டல் 😅.. "அட யாருப்பா அந்த ஹவுஸ்மேட்டு?"

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'விக்ரம்' திரைப்படம், மிகப் பெரிய பிளாக்பாஸ்டர் திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யாவும் விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

விக்ரம் படத்தை தொடர்ந்து, தற்போது லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார்.

Leo Vijay Lokesh kanagaraj GVM in Shooting spot pic

Images are subject to © copyright to their respective owners.

மேலும் லியோ திரைப்படம் மூலம் இசை அமைப்பாளர் அனிருத் நான்காவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் வைத்து நடைபெறுகிறது. முன்னதாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இருக்கும் BTS புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

Leo Vijay Lokesh kanagaraj GVM in Shooting spot pic

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், தற்போது லியோ படத்தின் மற்றொரு BTS புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் விஜய், கெளதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், மேத்யூ தாமஸ், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | மலையாள திரை உலகின் முதல் நடிகை.. கூகுள் டூடுல் கொடுத்த கவுரவம்.. Emotional பிளாஷ்பேக்!!

தொடர்புடைய இணைப்புகள்

Leo Vijay Lokesh kanagaraj GVM in Shooting spot pic

People looking for online information on Gautham Vasudev Menon, GVM in LEO Movie Shotting spot, Leo, Lokesh Kanagaraj, Vijay will find this news story useful.