www.garudabazaar.com
iTechUS

விஜய்க்கு அடுத்த கதை ரெடி பண்ணிய ஜில்லா இயக்குனர்.! கதை கேட்டு மெர்சலான பிரபல இயக்குனர்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாணா காத்தாடி, செம போதை ஆகாதே, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளவர் பத்ரி வெங்கடேஷ்.

Jilla Nesan new script for thalapathy vijay badri venkatesh tweet

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பதான் எனக்கு பிடிக்கல".. சிறுமியின் கியூட் வீடியோ.. நடிகர் ஷாருக் கானின் கலகல பதில்..!

இது தவிர சில ரியாலிட்டி ஷோக்களையும் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய்யின் ஜில்லா படத்தை இயக்கிய நேசன் குறித்து அவர் பகிர்ந்துள்ள ட்வீட் அதிகம் வைரலாகி வருகிறது.

முருகன், ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் நேசன். இவர் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த வேலாயுதம் திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையிலும் பணிபுரிந்திருந்தார்.

நேசன் இயக்கத்தில் உருவான "ஜில்லா" திரைப்படம், கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. விஜய் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் முழுக்க முழுக்க கமர்சியலாக இருந்து பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருந்தது. விஜய் மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இடையே வரும் எமோஷனல் காட்சிகள் மற்றும் எதிராக பேசும் காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Jilla Nesan new script for thalapathy vijay badri venkatesh tweet

Images are subject to © copyright to their respective owners.

இதனால் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அப்படி ஒரு சூழலில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது இயக்குனர் நேசன் குறித்து ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேசனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த பத்ரி, "மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான். தளபதி விஜய்க்காக நேசனின் புதிய ஸ்க்ரிப்ட் ஒன்றைக் கேட்டேன். சிறப்பாக உள்ளது. தளபதி இதைக் கேட்டு படம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். இது நடந்தால் தளபதி ரசிகர்களுக்கு அட்டகாசமாக இருக்கும்" என பத்ரி வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஜில்லா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற சூழலில், தற்போது அதே படத்தின் இயக்குனர் புதிய ஸ்கிரிப்ட் ஒன்றை விஜய்க்காக உருவாக்கி வைத்துள்ளதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | "சோஹேல் என்ன இப்டி தான் கூப்பிடுவாரு".. ஹன்சிகா சொன்ன Nick Name ரகசியம்!!.. Exclusive!!

தொடர்புடைய இணைப்புகள்

Jilla Nesan new script for thalapathy vijay badri venkatesh tweet

People looking for online information on Badri Venkatesh, Badri venkatesh tweet, Jilla Nesan, RT Neason, Thalapathy Vijay will find this news story useful.