www.garudabazaar.com
iTechUS

பிரபல நிறுவனத்திற்கு தொடர்ந்து 3 படங்கள் நடிக்கும் அஜித்குமார்?!.‌. செய்யாறு பாலு EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

Ajithkumar doing 3 films under lyca productions cheyyaru Balu exclusive

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'LEO' படத்தில் பஹத் பாசில் நடிக்கிறாரா?.. நடிகர் மேத்யூ தாமஸ் EXCLUSIVE பதில்!

ரசிகர்கள் மத்தியில் முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழகம் மட்டுமின்றி உலகளவில்  'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது.

துணிவு படத்தின் இமாலய வெற்றியை  அடுத்து நடிகர் அஜித்தின் அடுத்த 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

Images are subject to © copyright to their respective owners.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன் AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்துள்ளார்.

குறிப்பாக, "இன்னொரு தகவல் வந்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் தொடர்ந்து 3 படங்கள் அஜித் நடிப்பில் உருவாக உள்ளது. அதில் முதல் படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். விக்னேஷ் சிவன் படம் கைவிடப்படவில்லை. ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல் வந்திருக்கு.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து அஜித் 3 படம் ஒரே நிறுவனத்திற்கு செய்வது ஏன்? போனிகபூருக்கும் இதே தான் செய்தார்." என்ற கேள்விக்கு "ஏ.எம். ரத்னத்துக்கும் இப்படி தான் அஜித் பண்ணிருந்தார். தொடர்ந்து 3 படங்கள் கொடுத்தார்‌. அஜித் மனநிலை பற்றி தெரியவில்லை. அஜித் வளர்ச்சிக்கு உதவிய  தயாரிப்பாளர்களுக்கு அஜித் படம் பண்ணி தரலாம்." என செய்யாறு பாலு பதில் அளித்தார்.

Also Read | 'துணிவு' படத்தில் பயன்படுத்தப்பட்ட டம்மி பணம்.. வைரலாகும் மேக்கிங் BTS வீடியோ!

பிரபல நிறுவனத்திற்கு தொடர்ந்து 3 படங்கள் நடிக்கும் அஜித்குமார்?!.‌. செய்யாறு பாலு EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar doing 3 films under lyca productions cheyyaru Balu exclusive

People looking for online information on Ajith Kumar, Cheyyaru Balu, Cheyyaru Balu exclusive, Lyca Productions will find this news story useful.