www.garudabazaar.com

"போராடினால் நாம் வெல்லலாம்"... கனவை நனவாக்கிய டிஜே பிளாக்.. கூடவே இருந்து வாழ்த்திய பிரபலங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஒரு பக்கம் அதிகம் ரசிகர்கள் இருப்பது போல, இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் பெரிய அளவில் மக்களை கவரக்கூடிய வகையில் தான் இருக்கும்.

Vijay TV DJ Black buys own car priyanka and makapa wish

Images are subject to © copyright to their respective owners

பிக் பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்துமே மிக கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் மக்களை கவரும் அம்சங்களுடன் நிறைந்து இருப்பதால் அனைத்துமே பலரின் ஃபேவரைட் ஆகவும் உள்ளது.

மேலும் இப்படிப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றில் டிஜேவாக இருப்பவர்கள் ஒளிபரப்பும் பாடல்கள் மற்றும் காமெடி வசனங்களும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். அதிலும் குறிப்பாக, டிஜே பிளாக் என அறியப்படுபவர் ஒவ்வொரு ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பும் பாடல்கள் அந்த அளவுக்கு பொருத்தமாகவும் நம்மை ஒருவிதமாக சிரிப்பலையில் ஆழ்த்த வைக்கும் வகையில் இருக்கும்.

Vijay TV DJ Black buys own car priyanka and makapa wish

Images are subject to © copyright to their respective owners

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் டிஜே பிளாக் ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கும் போது அதற்கு ஏற்றார் போல் வேடிக்கையாகவோ அல்லது உணர்வுபூர்வமாகவோ பாடல்களையும், வசனங்களையும் ஒளிபரப்பும் போது அது பார்ப்பவர்களையும் ஒருவித ரசனையில் ஆழ்த்தவும் செய்யும். இப்படி விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் வெற்றி பெறுவதற்கு பின்னால் டிஜே பிளாக்கும் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது புதிய கார் ஒன்று வாங்கி உள்ளது தொடர்பான டிஜே பிளாக்கின் இன்ஸ்டாகிராம் பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.

Vijay TV DJ Black buys own car priyanka and makapa wish

Images are subject to © copyright to their respective owners

டிஜே பிளாக் விஜய் டிவியில் டிஜேவாகி மிகப்பெரிய பிரபலமாகவும் மாறி உள்ளார். அப்படி இருக்கையில் தனது உழைப்பால் வெற்றி பெற்று புதிய கார் ஒன்றையும் வாங்கியுள்ளார் டிஜே பிளாக்.

 

இது தொடர்பான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். தனது கனவு நிஜமானதாகவும் நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டுள்ள சூழலில், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோ டிஜே பிளாக்குடன் இருந்தனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV DJ Black buys own car priyanka and makapa wish

People looking for online information on DJ Black, Makapa Anandh, Priyanka will find this news story useful.