legend updated

விஜய் ஆண்டனி நடிக்கும் அரசியல் த்ரில்லர் படத்தில் ஜோடி சேரும் பிரபல தெலுங்கு நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஈ மாயா பிரேமிட்டோ' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தெலுங்கு இளைஞர்களின் மனங்களை கொள்ளை அடித்த காவ்யா தபார்.

Vijay Antony Pair With Kavya Thapar in His Next Movie

தற்போது தமிழில் ‛மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து, ‛மெட்ரோ' படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பிரஷாந்த் நடித்த ஜாம்பவான், அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை, சசிகுமார் - நிக்கி கல்ரானி நடிப்பில் வெளியாக இருக்கும் ‛ராஜ வம்சம்' ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து டி.டி.ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். தெகிடி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்புகள் தொடங்குகிறது.