தல Bloods ரெடியா ? - தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' தியேட்டர் ரீலிஸ் குறித்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Thala Ajith and Yuvn's Nerkonda Paarvai Chennai Theatre list

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் சென்னை சிட்டி, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளின் திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக பெற்றுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் இந்த படம் சென்னையில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, சத்யம் சினிமாஸ், எஸ்கேப் சினிமாஸ், ஐநாக்ஸ், தேவி சினிபிளக்ஸ், வுட்லேண்ட்ஸ், அண்ணா, ஆல்பர்ட், சங்கம் சினிமாஸ், பிவிஆர், பலாஸோ, ஏவிஎம் ராஜேஸ்வரி, உதயம் காம்பிளெக்ஸ், கமலா சினிமாஸ், ஐ டிரீம், பரத், மஹாராணி, எஸ்2 -பெரம்பூர், ஏஜிஎஸ், ராஜ், கோபி கிருஷ்ணா, மஹாலக்ஷ்மி உள்ளிட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறதாம்.