“கடைசியா கேட்டது இந்த பாடல் தான்” - தளபதி 63 பாடலாசிரியரின் மெர்சல் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் ட்வீட் செய்துள்ளார்.

Last heard song, Lyricist Vivek reveals he heard song from Thalapathy 63

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் பாடல் குறித்த தகவலை பாடலாசிரியர் விவேக் ட்வீட் செய்துள்ளார். ட்விட்டரில், ரசிகர் ஒருவர் பாடலாசிரியர் விவேக்கிடம் கடைசியாக கேட்ட பாடல் எது என்ற கேள்விக்கு, ‘தளபதி 63’ பாடல் என குறிப்பிட்டிருந்தார்.

அட்லி-விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு விவேக் எழுதிய ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் தளபதி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதேபோல், தளபதி 63 பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.