KHS கேம்: “எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்யா”- கர்ப்பிணி பெண் டாஸ்க்கில் அசத்திய விஜே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல டிவி தொகுப்பாளினியான விஜே ரம்யா கலந்துக் கொண்ட Behindwoods-ன் KHS கேமில் அவர் கொடுத்த கர்ப்பிணி பெண் டாஸ்க்கின் வீடியோ வெளியாகியுள்ளது.

VJ Ramya plays Kiss Me Hug Me Slap Me game with VJ Nikki

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடை நிகழ்ச்சிகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்தவர் விஜே ரம்யா. அது மட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓகே கண்மணி’, ‘வனமகன்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ ஆகிய திரைப்படங்களில் சில வேடங்களில் நடித்துள்ளார்.

'ஃபிட்னஸ் ஃப்ரீக்'-ஆன விஜே ரம்யா உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில் அதைக கவனம் செலுத்துவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்ட்டில் விஜே நிக்கியுடன் விஜே ரம்யா விளையாடினார்.

அப்போது, சில ஃபிட்னஸ் பயிற்சிகளை தனது தம்பிக்கு கொடுப்பது போல் நினைத்து டெரரான பல டாஸ்க்குகளை கொடுத்தார். “எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான் - இவன் ரொம்ப நல்லவன் டா” என வடிவேலு பாணியில், விஜே ரம்யா கொடுத்த கடினமான கர்ப்பிணி டாஸ்க்கையும் விஜே நிக்கி அசால்ட்டாக செய்து அசத்தினார்.

KHS கேம்: “எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்யா”- கர்ப்பிணி பெண் டாஸ்க்கில் அசத்திய விஜே வீடியோ