Godavari news May 2nd

ரசிகர்களே பொறுமையா இருங்க - 'தளபதி' 63 படக்குழுவிலிருந்து வந்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தெறி', 'மெர்சல்' திரைப்படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி இணைந்திருக்கும் படம் 'தளபதி 63' . இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Special note from Vijay and Nayanthara's Thalapathy 63 directed by Atlee

இந்த படத்தில் நயன்தாரா, கதிர் , ஜாக்கி ஷெராஃப் , யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிகே விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் குறித்து உறுதிப்படுத்தப்படாத செய்திகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தளபதி 63 படக்குழுவில் இருந்து ஜெகதீஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லியின் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை செய்துள்ளார்.  அந்த பதிவில் ,  70 நாள் தொடர் ஷூட்டிங் பணிகளையடுத்து தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பில் நடைபெற்றுவருகிறது.

இந்த படம் குறித்த தகவல்கள், அறிவிப்புகள் அதற்குரிய சரியான நேரத்தில் வெளியிடப்படும். ரசிகர்கள் பொறுமையாக இருங்கள். இனி வதந்திகளை நம்பாதீர்கள் என தெரிவித்துள்ளார்.