பிக்பாஸ் வனிதா நெகிழ்ச்சி...."எங்கள் கல்யாணத்துக்கு, அம்மா கொடுத்த பரிசு"... என்னனு பாருங்க..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தளபதி விஜய்யுடன் 'சந்திரலேகா' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி மற்றும் யூட்யூப் சேனல் மூலம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

நடிகை வனிதாவின் தாய் கொடுத்த திருமண பரிசு Biggboss Vanitha mothers gift for her marriage

இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது "அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்நிலையில் இருவரும் தற்போது திருமணத்திற்கான வேளைகளில் பிசியாக உள்ளனர்.

அவரது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடக்க இருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கான மோதிரம் கொரோனா  ஊரடங்கினால் பாதி வழியிலேயே நின்றுவிட்டது. மோதிரம் வந்து சேருமா என்ற கவலையில் இருந்தார். அந்த மோதிரம் தற்போது வீடு வந்து சேர்ந்துள்ளது. எனவே வைர மோதிரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு தனது தாயின் பரிசு என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The rings have arrived...Mom's friend sent me these as a gift 🤗

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

தொடர்புடைய செய்திகள்

நடிகை வனிதாவின் தாய் கொடுத்த திருமண பரிசு Biggboss Vanitha mothers gift for her marriage

People looking for online information on Biggboss, Marriage, Peter Paul, Vanitha will find this news story useful.