அத்திவரதரை தரிசித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் வசிவன் ஆகியோர் சென்றுள்ளனர்.

Lady Superstar Nayanthara, Vignesh Shivan visits Athivaradhar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். நின்ற கோலத்தில் இருக்கும் அத்திவரதரை காண தினசரி கோடிக்கணக்கான பக்தர்கள்

இந்நிலையில் இன்று அதிகாலை நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு சென்று அத்திவரதரை வழிபட்டார். வி.ஐ.பி தரிசனத்தில் சென்ற அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நள்ளிரவில் தனது மனைவியுடன்காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

40-ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளும் அத்திவரதர் வைபவம் நாளை(ஆக.16) மாலையுடன் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் அவர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படவுள்ளார்.  இதனால் தற்போது கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அத்திவரதரை தரிசித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீடியோ