கேரளா, கர்நாடகா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா - கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 15, 2019 05:30 PM
கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட, நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் முதற்கட்டமாக ரூபாய் 10 லட்சத்தை நிவாரணமாக வழங்கி உள்ளனர்.

சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த மழை பாதிப்பிலிருந்து சற்று மீண்டு வந்த கேரளாவிற்கு இந்தாண்டு மேலும் பாதிப்பை தந்துள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின, நிலச்சரிவால் பலர் வீடுகளை இழந்தனர்.
இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ரூ.10 லட்சத்தை நிவாரணமாக வழங்கி உள்ளனர். இதற்கான காசோலையை 2டி இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் வழங்கினார்.