சுந்தர் சி இயக்கும் காஃபி வித் காதல்.. ரிலீசான முதல் சிங்கிள் பாடல்! எப்படி இருக்கு
முகப்பு > சினிமா செய்திகள்சுந்தர் சி இயக்க, குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படம் காஃபி வித் காதல்.

Also Read | ராணுவ வீரனாக தனுஷ் நடிக்கும் புதிய பீரியட் படம்.. மரண மாஸ் போஸ்டருடன் வெளியான அப்டேட்!
இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது .
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ளது. ரம் பம் பம் ஆரம்பம் எனும் இந்த சிங்கிள் பாடல் ரீமேக் மிக்ஸ் ஆக யுவன் சங்கர் ராஜா இசையில் தற்போது உருவாகி உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜர் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை வாலி எழுதியிருந்தார். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.
ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன் , ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன் , சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன் . அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படத்தில் சுந்தர்.சி. தனது பாணியில் கலகலப்புடன் கூறி இருக்கிறார்.
மேலும் E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.
Also Read | விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல'.. வீடியோ வடிவில் வெளியான முழு பாடல்! போடு ஆட்டத்த
சுந்தர் சி இயக்கும் காஃபி வித் காதல்.. ரிலீசான முதல் சிங்கிள் பாடல்! எப்படி இருக்கு வீடியோ