சுந்தர் சி இயக்கும் காஃபி வித் காதல்.. யுவன் & ஆதி குரலில் ரிலீசான கலர்ஃபுல் 'தியாகி பாய்ஸ்'!
முகப்பு > சினிமா செய்திகள்சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Also Read | பாரிஸ் நகரில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. உலகப்புகழ் பெற்ற இடத்தில் இருந்து வெளியிட்ட வைரல் ஃபோட்டோ!
குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படம் காஃபி வித் காதல்.
இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் சிலநாட்களுக்கு முன் வெளியானது. ரம் பம் பம் ஆரம்பம் & Baby Gurl எனும் அந்த சிங்கிள் பாடல்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவானது. அடுத்ததாக தற்போது யுவன் சங்கர் ராஜா & ஹிப் ஹாப் தமிழா ஆதி குரலில் தியாகி பாய்ஸ் பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா & ஆதி இந்த பாடல் வீடியோவில் நடித்துள்ளனர்.
ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன் , ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன் , சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன் . அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி முடித்துள்ளார்.
Also Read | இவங்க தான் பூஜா ஹெக்டே தங்கச்சியா? அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட சூப்பர் டூர் போட்டோஸ்!
சுந்தர் சி இயக்கும் காஃபி வித் காதல்.. யுவன் & ஆதி குரலில் ரிலீசான கலர்ஃபுல் 'தியாகி பாய்ஸ்'! வீடியோ