BREAKING : தேவர் மகன்-2 படத்தில் இணையும் விஜய் சேதுபதி?... தீயாய் பரவும் செய்தி...உண்மை என்ன...?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலகநாயகன் கமல் இணைந்து கலக்கிய படம் 'தேவர் மகன்'. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமான இதற்கு, இன்று வரை ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி மிகப்பெரிய சாதனை படமான தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் கமல்ஹாசன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஊரடங்கு முடிந்தவுடன் பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் நாசரின் மகன் கேரக்டரில் நடிகர் விஜய்சேதுபதி இணைய இருப்பதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இதன் உண்மை நிலையை அறிய நாம் படக்குழுவினரை தொடர்பு கொண்டபோது. அவர்கள் அப்படி எதுவும் இல்லை என்றும் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது என்றும், உறுதியான பின்பு தகவல் வெளியாகும் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே நடிகர் விஜய்சேதுபதி, கமல்ஹாசனின் "தலைவன் இருக்கின்றான்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த படம் எப்போது வெளி வந்தாலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே ரசிகர்கள் படத்திற்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது