இங்கிலாந்து வரை ரீச்சான தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' - சமூக விலகல் கடைபிடித்து செம்ம டான்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் இசையில் தளபதி விஜய்  - விஜய் சேதுபதி இணைந்து நடித்து உருவாகியுள்ள 'மாஸ்டர்' பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மொழிகள் கடந்து 'மாஸ்டர்' பாடல்கள் மக்களை ஈர்த்துள்ளது.

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் நாட்டில் ஒரு சிலர் முறையாக சமூக விலகலை கடைபிடித்து வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பகிர்ந்த இசையமைப்பாளர் அனிருத் வாத்தி கமிங் பாடல் சமூக விலகலை கடைபிடிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment sub editor