www.garudabazaar.com

புது வீடு கட்டியாச்சு.. பால் பொங்கியாச்சு.. KPY தீனா பகிர்ந்த கிரஹ பிரவேச போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள் பலர் இன்றும் திரையுலகிலும் சின்னத்திரை உலகிலும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சி பிற்காலத்தில் சந்தானத்துக்கு திரைத்துறையில் நல்ல அடையாளம் கொடுத்தது.

KPY Dheena house warming photos goes viral Trending

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Interview -ல குடிச்சுட்டு வருவியா?.. ‘குடிமகான்’ படக்குழுவினர் ஜாலி பேட்டி.. வீடியோ

இன்று திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சந்தானம் திகழ்ந்து வருகிறார். இதேபோல் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று முன்னணி இளம் ஹீரோவாக திகழ்கிறார். இவர்களைத் தொடர்ந்து மாகாபா ஆனந்த், ரோபோ சங்கர் , விஜய் டிவி ராமர், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் திரையுலகில் வலம் வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பிரபலமான நடிகர்கள் பலர் திரையுலகிலும் சின்னத்திரை உலகிலும் வலம் வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் தொடங்கி பல நிகழ்ச்சிகளில் தம்முடைய குரலால் கவனம் ஈர்த்தவர் தீனா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான தீனா, அவ்வப்போது விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் போன் பண்ணி ஒவ்வொரு போட்டியாளரையும் கலாய்ப்பார். இவருடைய காமெடி கவுண்டர்கள் மிகவும் பிரபலம். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு முறை முடிந்த பிறகும் பிக்பாஸ் போட்டியாளர்களை தீனா கலாய்ப்பது என்பது தனி நிகழ்ச்சியாகவே நடக்கும்.

KPY Dheena house warming photos goes viral Trending

Images are subject to © copyright to their respective owners.

அந்த அளவுக்கு டைமிங் காமெடியில், பெயரை சம்பாதித்த தீனா முன்னதாக தனுஷ் நடித்து இயக்கிய பா.பாண்டி திரைப்படத்தில் பிரபலமானார். தொடர்ந்து குற்றம் செய்யேல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி, விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படம் என திரையுலகில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியானார். இந்த நிலையில் இவர் தற்போது தம்முடைய சொந்த வீடு கட்டி குடிபோன புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திருமண மண்டபம் போல் பிரம்மாண்டமான வீட்டை தீனா & குடும்பத்தினர் தங்கள் உழைப்பில் கட்டியுள்ளனர் என்று பாராட்டி வருகின்றனர்.

Also Read | கிராமத்து லுக்கில் மாஸ் காட்டும் அருள்நிதி.. வெளியான கழுவேர்த்தி மூர்க்கன் போஸ்டர்..

தொடர்புடைய இணைப்புகள்

KPY Dheena house warming photos goes viral Trending

People looking for online information on KPY Dheena, Trending, Viral will find this news story useful.