www.garudabazaar.com

செம்ம ஸ்டைலான புது லுக்கில் LEGEND சரவணன்.. வைரல் ஃபோட்டோ.. அடுத்த படத்துக்கா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Legend Saravanan New Look Images went viral on social media

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "யாருய்யா நீங்க".. விக்னேஷ் சிவன் TWITTER பக்கத்தில் நடந்த சம்பவம்.. கடுப்பாகி போட்ட பதிவு!  

விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என  கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியானது ‘தி லெஜண்ட்’. இந்த படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாயை திரையரங்க டிக்கெட் விற்பனை மூலம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Legend Saravanan New Look Images went viral on social media

Images are subject to © copyright to their respective owners.

இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

Legend Saravanan New Look Images went viral on social media

Images are subject to © copyright to their respective owners.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொள்ள, ரூபன் படத்தொகுப்பை கையாண்டார். கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொண்டனர், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹிட் ஆகின.

Legend Saravanan New Look Images went viral on social media

Images are subject to © copyright to their respective owners.

விரைவில் இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Legend Saravanan New Look Images went viral on social media

Images are subject to © copyright to their respective owners.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் சரவணன் தமது டிவிட்டர் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Legend Saravanan New Look Images went viral on social media

Images are subject to © copyright to their respective owners.

மீசை மற்றும் தாடியுடன் கோட் சூட் அணிந்து நவநாகரீக தோற்றத்தில் சரவணன், புகைப்படங்களில் காட்சியளிக்கிறார். "புதிய அத்தியாயத்தின் அறிவிப்பு விரைவில்" என இந்த புகைப்படங்களுக்கு சரவணன் தலைப்பிட்டு உள்ளார்.

Also Read | துபாயில் குடும்பத்துடன் நடிகர் அஜித்குமார்.. ஷாலினி பகிர்ந்த வைரல் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Legend Saravanan New Look Images went viral on social media

People looking for online information on Legend Saravanan, Legend Saravanan New Look will find this news story useful.