www.garudabazaar.com

KGF CHAPTER 2 ஷூட்டிங்ல ஜாலியா சேட்டை செஞ்சுருக்காங்க.. நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பகிந்த செமயான BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

KGF Chapter 2 Actress srinidhi shetty shared BTS picture

இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.

KGF Chapter 2 Actress srinidhi shetty shared BTS picture

தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது. இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்துள்ளது.

KGF Chapter 2 Actress srinidhi shetty shared BTS picture

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

KGF Chapter 2 Actress srinidhi shetty shared BTS picture

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது முகநூல் பக்கத்தில் கே.ஜி.எப் 2 பட படப்பிடிப்பில் எடுத்த BTS போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில் ஒளிப்பதிவாளர் புவன் கௌடாவை குறிப்பிட்டு படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்ததற்கு நான் தான் காரணம் என ஜாலியாக கூறியுள்ளார். 

KGF Chapter 2 Actress srinidhi shetty shared BTS picture

படப்பிடிப்பில் கேம்ரா மேனுக்கு பதில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கேமராவை கையாளுவது போல அந்த புகைப்படம் அமைந்துள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

KGF Chapter 2 Actress srinidhi shetty shared BTS picture

People looking for online information on KGF, Kgf 2, KGF Chapter 2, Srinidhi Shetty, Srinithi Shetty, Yash will find this news story useful.