Kaateri logo top
www.garudabazaar.com

“நானும் TTF -ம் ஒரு Ride போனது குத்தமாங்க.?” - Pyros Girl கொடுத்த பளீச் பேட்டி.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போதயெல்லாம் 2K கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக பைக் ரைடர்கள் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் பைக் ரைடர்கள் பைக்கில் பயணம் செய்து வழிநெடுக இருக்கும் பல்வேறு விஷயங்களை வீடியோ வழியாக காண்பித்து ஏகோபித்த ரசிகர்களை பெற்ற வருகின்றனர்.

me and ttf vasan just friend pyros girl abi fun interview

சுவாரசியமான பைக் குறித்த விஷயங்கள், டிராவல் குறித்த விஷயங்கள் என பலவற்றையும் போகிற போக்கில் தங்களை பின்தொடரும் ரசிகர்களுக்கு சொல்லும் இவர்கள், பைக் மீது அலாதி பிரியம் கொண்டவர்களாகவும், அதேசமயம் பைக் ஓட்டுவதால் தங்களை பின் தொடரும் ரசிகர்கள் மீது பிரியம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

me and ttf vasan just friend pyros girl abi fun interview

அப்படி சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் சமீபத்தில் தம் ரசிகர்களை சந்தித்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வந்ததை அனைவராலும் அண்மையில் காண முடிந்தது. இவரைப் போன்று இன்னொரு பைக் ரைடர் ஒருவர் பிரபலமான பெண்ணாக இருக்கிறார் என்றால் அவர்தான் பைரோஸ் கேர்ள் அபி.

ஆம், பைக் ரைடர்களில் அரிதான இளம் பெண்ணாக இருக்கும் இவர், தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்திருக்கும் பிரத்யேக பேட்டியில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில், “ஒரு ரைடராக எதார்த்தமாக ஒரு நாள் டிடிஎஃப் வாசனை சந்தித்தேன். அதன் பிறகு இருவருமே வீடியோ விளாக் வைத்திருப்பதால் ஒன்றாக ரைடு சென்று அந்த வீடியோவை தங்களுடைய தளங்களில் பதிவிடலாம் என்று நினைத்து ஒரே ஒரு முறை ஒரு ரைட் போனோம். அது ஒரு குற்றமா நாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் மட்டுமே!” என்று விளக்கம் அளித்துள்ளார்.

me and ttf vasan just friend pyros girl abi fun interview

இதேபோல், பைக் ஓட்டும் இந்த விருப்பத்தை குறித்து தன்னுடைய குடும்பத்தாரிடம் முதலில் சொன்ன போது அவர்கள் பயந்ததாகவும், பிறகு தன்னை புரிந்து கொண்டு தமக்கு சப்போர்ட் பண்ணுவதாகவும் தெரிவித்த பைரோஸ் கேர்ள், பைரோஸ் என்றால் நெருப்பு என்று குறிப்பிடுகிறார். மேலும் தொடக்கத்தில் தமக்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்ததாகவும், தம்முடைய நண்பர்கள் கொடுத்த உற்சாகம் மற்றும் ஊக்கத்தினால் தற்போது அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் புறந்தள்ளிவிட்டு பாசிட்டிவிட்டியை மட்டுமே பெற்றுக் கொள்வதாகவும் குறிப்பிடுகிறார்.

இவர் பேசும் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை இணைப்பில் இருக்கும் வீடியோவில் காணலாம்.

“நானும் TTF -ம் ஒரு RIDE போனது குத்தமாங்க.?” - PYROS GIRL கொடுத்த பளீச் பேட்டி.. வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

me and ttf vasan just friend pyros girl abi fun interview

People looking for online information on Pyros girl, Pyros girl clarification about ttf vasan, Pyros girl clarification about ttf vasan and her, Pyros girl interview, TTF Vasan, TTF Vasan fans Meet will find this news story useful.