Breaking: விக்ரம் 58 படத்தில் இணையும் KGF ஸ்டார்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 15, 2019 12:20 PM
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘கடாரம் கொண்டன்’ திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்ஃபான் பதான் ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நேற்று (அக்.14) வெளியானது.
அதைத் தொடர்ந்து இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கன்னடத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி தேசிய அளவில் கவனம் ஈர்த்த KGF படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் 58 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.