நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த தெலுங்கு திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் உருவாகவிருக்கும் இந்தியாவின் முதல் கால்பந்து பயிற்சியாளர் சயது அப்துல் ரஹிமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் நிதின் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சித்தார எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் நாகவம்சி தயாரிக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ்- சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர தெலுங்கில் நாகார்ஜுனா நடித்துள்ள ‘மன்மதுடு 2’ திரைப்படத்திலும் கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், பெயரிடப்படாத பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.