'சீமராஜாவுக்கு பிறகு.... ' கீர்த்தி சுரேஷின் புதுப்படம் குறித்து வெளியான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் 'பைரவா', 'சர்கார்', 'ரஜினி முருகன்', 'ரெமோ' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'நடிகையர் திலகம்' படத்தில் நடை, உடை, பாவணை, உடல் வாகு என சாவித்திரியாகவே வாழ்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh to act Nagarjuna and Samantha's Manmathudu 2

அந்த படத்தில் நடித்ததற்காக அவர் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது ஹிந்தி படம் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தை கடந்த வருடம் வெளியாகி ஹிட்டடித்த 'பதாய்ஹோ' படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்குகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்துக்காக உடல் மெலிந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. தற்போது அவர் நாகர்ஜூனாவின் 'மன்மதுடு 2' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் அறிவித்திருந்தார். அதனை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், ''நன்றி ராகுல், நாகர்ஜூனாவுடன் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சமந்தாவும் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக ஏற்கனவே இயக்குநர் அறிவித்திருந்தார். முன்னதாக சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.