Fakir Other Banner USA

'வீட்டு குத்து விளக்கே..' சாண்டியின் இசையைக் கண்டு திரு திருவென முழிக்கும்- பிக் பாஸ் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய 3வது புரொமோ வெளியாகியுள்ளது.

Sandy practising Carnatic music with Mohan Vaithiya - Bigg Boss 3 new promo released

விஜட் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் மிக பிரம்மாண்டமாக நேற்று தொடங்கியது. 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தனக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக 2 புரொமோ வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது 3வது புரொமோ வெளியிடப்பட்டுள்ளது. முதல் புரொமோவில், காலையில் எல்லோரும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருக்கையில், சாண்டி மாஸ்டர் தண்ணீர் வற்றிய நீச்சல் குளத்தில் விழுந்து கிடந்தது போன்ற காட்சிகள் இருந்தன. அதையடுத்து வெளியான புரொமோவில், தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொருத்தப்பட்டிருப்பது பற்றிய விவாதத்தில் சேரன் மற்றும் பாத்திமா பாபு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தற்போது வெளியாகியுள்ள புரொமோவில், இசைக்கலைஞர் மோகன் வைத்தியாவிடம் சாண்டி மாஸ்டர் தனது இசைஞானத்தை வளர்த்துக் கொள்ளும்படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கர்நாடக இசை முதல் கானா இசை வரை தனது சங்கீத திறமையை சாண்டி மாஸ்டர் வெளிப்படுத்தினார்.

இதேபோல், போன சீசனில் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதனிடம் டேனி மற்றும் பாலாஜி ஆகியோர் ‘இசை எங்கிருந்து வருது’ என காமெடியாக கேள்வி கேட்டதற்கு அனந்த் கோபமடைந்து பேசியது குறிப்பிடத்தக்கது.