பாலிவுட்டில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷின் கதை எதை பற்றியது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் பிரபல கால்பந்து வீரரின் பயோபிக் திரைப்படம் என தெரியவந்துள்ளது.

Keerthy Suresh to make her Bollywood debut in Football Legend Syed Abdul Rahim Biopic

இந்திய சினிமாவில் தற்போது பயோபிக் திரைப்படங்களின் வருகை அதிகமகை வருகிறது. அந்த வகையில் அஜய் தேவ்கன் நடிப்பில் பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின் பயோபிக்கும் உருவாகவுள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக தென்னிந்திய ‘நடிகையர் திலகம்’ நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் களமிறங்குகிறார். இப்படத்தை ஹிந்தியில் ‘பதாய் ஹோ’ என்ற படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஜூன் மாதம் முதல் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஆகாஷ் சவ்லா, அருணவ ஜாய் செங்குப்தா ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படம் 1950-1963 வரை இந்திய கால்பந்து அணி படைத்த சாதனைகளை போற்றும் வகையில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.