40,50 பேரு.. 1000 கிலோ வெயிட்டு..- ஸ்பெயினுக்கு சிட்டா பறக்கும் கீர்த்தி சுரேஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய தெலுங்கு திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Keerthy Suresh's next telugu film, shooting is all set to start from June 13 in Spain

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் ‘சர்கார்’, தெலுங்கில் ‘மகாநடி’ ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற நிலையில், தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

அக்கினேனி நாகார்ஜுனா நடிக்கும் ‘மன்மதுடு 2’ படத்தில் முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்குகிறார். இதையடுத்து கீர்த்தி நடிக்கும் 20வது படமனா தெலுங்கு படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன் பேனரில் உருவாகும் இபப்டத்தை நரேந்த்ர நாத் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு ஐரோப்பாவில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக இயக்குநர் மஹேஷ் எஸ்.கொனேரு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘45-50 ஆர்ட்டிஸ்ட், தொழில்நுட்ப கலைஞர்கள், 1000 கிலோ தொழில்நுட்ப சாதனங்களுடன் ஐரோப்பா செல்வது கடினமான ஒன்று தான். ஆனால், தயாரிப்புக் குழுவிற்கு இது அறிவூட்டும் அனுபவமாக இருக்கும். கீர்த்தி நடிக்கும் 20வது படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன்.13ம் தேதி முதல் ஸ்பெயின் நாட்டில் தொடங்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாலிவுட்டில் அமித் ரவீந்தர் நாத் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிக்கும் கால்பந்து விளையாட்டு வீரரான சயது அப்துல் ரஹிமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தை போனி கபூர், ஆகாஷ் சாவ்லா, அருணவ ஜோய் செங்குப்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.