கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஜய்யின் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.  இவர் சிவகார்த்திகேயனுடன் 'ரஜினி முருகன்', விஜய்யுடன் 'பைரவா', 'சர்கார்' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Ajay Devgn is hero of Keerthy suresh's Hindi Film

மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரியாக இவர் நடித்திருந்தார். இதில் சாவித்திரியின் இளமை காலங்கள் முதல் அவர் மரணிக்கும் தருவாய் என வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் இந்த கதையில் தனது வெரைட்டியான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் நடிகர்கள் என ஒரு சேர அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் இவர் தற்போது ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவிருக்கிறாராம்.

மேலும் இந்த படத்தை ஹிந்தியில் கடந்த வருடம் வெளியாகி ஹிட்டடித்த 'பதாய் ஹோ' படத்தின் இயக்குநர் அமித் ஷர்மா இயக்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் தற்போது இந்த படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.