கர்ப்பிணியாக நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்...பர்த்டே ஸ்பெஷலாக வெளியான பர்ஸ்ட் லுக் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 17, 2019 01:13 PM
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘மேயாத மான்’, ‘மெர்குரி’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 3வது திரைப்படத்தில் ‘தேசிய விருது’ வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த மாதம் கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 17) கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘பெண்குயின்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி தோற்றத்தில் காட்சியளிப்பதால், இது முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். முழுக்க முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படம் 2020ம் ஆண்டு ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Wishing @KeerthyOfficial a very happy birthday and Happy to present to you all the Title poster of @StonebenchFilms next production..#KeerthySuresh24 is #Penguin@Music_Santhosh @kaarthekeyens @EashvarKarthic @insidekarthik @Madhampatty @onlynikil #HBDKeerthySuresh pic.twitter.com/xVzKc4BZEj
— karthik subbaraj (@karthiksubbaraj) October 17, 2019