தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த கேம் ஆஃப் திரோன்ஸ் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

James Cosmo Plays an anticipated role in Dhanush and Karthik Subbaraj's Flim

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் ஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜேம்ஸ் காஸ்மோ ஹாலிவுட்டில் பிரேவ்ஹார்ட், டிராய், கேம் ஆஃப் திரோன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.