www.garudabazaar.com

நம்மள விட பெரிய மெஸ்ஸி FAN போல.. பிரபல முன்னணி நடிகையின் தெறிக்கும் உலகக் கோப்பை கொண்டாட்டம்.. VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக கோப்பை கால்பந்து போட்டியை பிரபல நடிகை கண்டு களித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Keerthy Suresh Fan Girl Moment of Lionel Messi Argentina

Also Read | பிரபல இளம் நடிகருக்கு அஜித் கொடுத்த பரிசு.. நெகிழ்ந்து போய் ட்வீட் செய்த நடிகர்!

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. 

நேற்றைய இறுதிப்போட்டி உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

Keerthy Suresh Fan Girl Moment of Lionel Messi Argentina

இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்திருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அந்த அணியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

Keerthy Suresh Fan Girl Moment of Lionel Messi Argentina

நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில்  3-3 என  போட்டி சமன் ஆனது. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4- 2 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை அர்ஜென்டினா  வென்றது.

இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த இறுதி போட்டியை தனது வீட்டில் அமர்ந்து பார்த்த தருணங்களை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் பகிர்ந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸியின் ஜெஸ்ஸி அணிந்து கீர்த்தி சுரேஷ் இந்த போட்டியை கண்டு களித்துள்ளார்.

Keerthy Suresh Fan Girl Moment of Lionel Messi Argentina

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார்.

Keerthy Suresh Fan Girl Moment of Lionel Messi Argentina

கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர்,

உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

Also Read | FIFA: இந்த வருசத்தோட மிகவும் மகிழ்ச்சியான நாள்.. தனுஷ் வைரல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Fan Girl Moment of Lionel Messi Argentina

People looking for online information on Argentina, FIFA World Cup, Keerthy Suresh, Lionel Messi will find this news story useful.