www.garudabazaar.com

KEERTHY SURESH BIRTHDAY : புது லுக்கில் கீர்த்தி சுரேஷ்.. தசரா படத்தின் வித்தியாசமான கேரக்டர் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி நடிக்கும் தசரா படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Keerthy Suresh First Look Poster from Nani Dasara Movie

Also Read | KANTARA: 'காந்தாரா' பார்த்து படக்குழுவை பாராட்டி தள்ளிய அனுஷ்கா.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க!

நேச்சுரல் ஸ்டார் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமாக  'தசரா' அமைந்துள்ளது.

நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் பாடல் தூம் தாம் வரை நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

Keerthy Suresh First Look Poster from Nani Dasara Movie

இந்நிலையில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக ஜொலிக்கிறார். மஞ்சள் நிற புடவை அணிந்து நடனம் ஆடும் நிலையில் போஸ்டர் அமைந்துள்ளது, அதே நேரத்தில் டிரம்மர்கள் டிரம்ஸ் வாசிக்கும் படங்களும் பின்னணியில் அமைந்துள்ளது. வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

Keerthy Suresh First Look Poster from Nani Dasara Movie

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

Also Read | பொன்னியின் செல்வன் நந்தினிக்கு ஆண்டாள் கொண்டை.. மணிரத்னம் சொன்ன செம பின்னணி காரணம்!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh First Look Poster from Nani Dasara Movie

People looking for online information on Dasara, Dasara Movie, Keerthy Suresh, Keerthy Suresh First Look Poster, Nani will find this news story useful.