www.garudabazaar.com

Keerthi Suresh : அப்பா, அம்மா பர்த்டே.. கொண்டாடி தீர்த்த கீர்த்தி சுரேஷ்..😍‌ வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Celebrating Her Parents Birthday

Also Read | "எனக்கு 56.. அவளுக்கு 24".. "கேர்ள் ஃப்ரண்டுக்கு பதிலா Wife-னு சொன்னேன்".. போட்டுடைத்த பப்லூ.! Exclusive

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

Keerthy Suresh Celebrating Her Parents Birthday

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

Keerthy Suresh Celebrating Her Parents Birthday

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.36 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

Keerthy Suresh Celebrating Her Parents Birthday

கீர்த்தி சுரேஷ் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Keerthy Suresh Celebrating Her Parents Birthday

அதில், "தங்களது வாழ்க்கை, காதல், சிரிப்பு மற்றும் பிறந்தநாளையும் பகிர்ந்து கொள்ளும்  காதல் மிகுந்த ஜோடிகள் இவர்கள் தான்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா & அப்பா!" என கீர்த்தி சுரேஷ் பதிவிட்டு பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குடும்பத்தினர் கேக் வெட்டி ஊட்டி விட்டும்  முத்தம் கொடுத்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

Also Read | "டயலாக் சொன்ன உடனே பண்ணிடு".. லவ்டுடே படத்தின் BTS வீடியோவை பகிர்ந்த இயக்குனர் பிரதீப்.!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Celebrating Her Parents Birthday

People looking for online information on Actress Keerthy Suresh Celebrates Her Parents Birthday, Keerthy Suresh will find this news story useful.