www.garudabazaar.com

பூர்வீக வீட்டில் கீர்த்தி சுரேஷ்.. தென் தமிழ் நாட்டுல இந்த கிராமம் தான் சொந்த ஊராம்! வைரல் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கீர்த்தி சுரேஷ் தென் தமிழகத்தில் உள்ள தனது அம்மா வழி பூர்வீக கிராமத்திற்கு சென்றுள்ளார்.

Keerthy Suresh Ancestral House at Thirukurungudi

Also Read | சந்திரமுகி-2 படத்தில் இணையும் பிரபல முன்னணி நடிகை? தரமான அப்டேட்..

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

Keerthy Suresh Ancestral House at Thirukurungudi

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

Keerthy Suresh Ancestral House at Thirukurungudi

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர்,

உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

Keerthy Suresh Ancestral House at Thirukurungudi

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.36 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

Keerthy Suresh Ancestral House at Thirukurungudi

கீர்த்தி சுரேஷ் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Keerthy Suresh Ancestral House at Thirukurungudi

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனது அம்மா வழி பூர்வீக கிராமம் திருக்குறுங்குடிக்கு சென்று தனது பூர்வீக வீட்டை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். நாங்குநேரி அருகே உள்ள திருக்குறங்குடியில் உள்ள அழகிய நம்பி பெருமாள் கோயிலிலை சுற்றி பார்த்த புகைப்படத்தையும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

Keerthy Suresh Ancestral House at Thirukurungudi

கீர்த்தி சுரேஷ் உடன் அவரது அம்மா மேனகா, ஆச்சி சரோஜா, சகோதரி ரேவதி ஆகியோரும் திருக்குறுங்குடி சென்றுள்ளனர்.

Also Read | சமந்தா நடிக்கும் புதிய படம்.. இணைந்த அல்லு அர்ஜுன் மகள்?.. செம்ம அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Ancestral House at Thirukurungudi

People looking for online information on Keerthy Suresh, Keerthy Suresh Ancestral House, Thirukurungudi will find this news story useful.