www.garudabazaar.com

கீர்த்தி சுரேஷூக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த நண்பர்கள்.. ரசிகர்களை கவரும் சூப்பர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Surprise Birthday Party Video

Also Read | பிரபல சென்னை ஹோட்டலில் சீரக சம்பா பிரியாணி.. ருசித்து சாப்பிட்ட நயன்தாரா & விக்னேஷ் சிவன்!

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

Keerthy Suresh Surprise Birthday Party Video

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.36 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

Keerthy Suresh Surprise Birthday Party Video

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் & வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாத இறுதியில் வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் நண்பர்கள் சர்ப்ரைஸாக பிறந்தநாள் பார்ட்டி வைத்து அசத்திய வீடியோவாக கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ள வீடியோ அமைந்துள்ளது. மேலும் தனது நாய் Nyke உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்'.. படத்தில் இணைந்த பிரபு தேவா & விஜய் சேதுபதி! அதிரடி அப்டேட்

கீர்த்தி சுரேஷூக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த நண்பர்கள்.. ரசிகர்களை கவரும் சூப்பர் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Surprise Birthday Party Video

People looking for online information on Keerthy Suresh, Keerthy Suresh Birthday Party will find this news story useful.