Bigg Boss 3: ''எல்லா தெரிஞ்சும் முகேனும்...'' - சாக்ஷியால் அபிராமியை தவிர்க்கும் முகேன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாக கவின், லாஸ்லியா, சாக்ஷி ஆகியோருக்கிடையே நிலவும் முக்கோண காதல் கதை தான் ஹாட் டாபிக் ஆக இருந்தது.

Kavin , Losliya, Sandy, Kamal Haasan's Bigg Boss August 5 Promo

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ரேஷ்மா எலிமினேட் செய்யப்பட்டார். அதன் அடுத்த நொடியே பிரச்சனை தொற்றிக் கொண்டது. ஆனால் இந்த முறை, முகேன், அபிராமி மற்றும் சாக்ஷிக்கு இடையே பிரச்சனை.

இதனையடுத்து இன்று (05-08-2019) விஜய் டிவி வெளியிட்ட பிக்பாஸ் முதல் புரோமோவில், அபியிடம் சாக்ஷி, நான் முகேனிடம் பேசுவது உனக்கு பிடிக்கலையா என்று கேட்கிறார். அப்போது அபி எல்லா பிரச்சனைக்கும் நீ தான் காரணம் என்று குற்றம்சாட்டிவிட்டு, லாஸ்லியாவிடம் சென்று அழுகிறார்.

அப்போது சாக்ஷியை குறிப்பிட்டு, அவங்களுக்கு அவங்க பிரச்சனை தான் முக்கியம். எல்லா தெரிஞ்ச முகேனும் அப்டி உக்காந்துட்டு இருக்கிறது தான் Irritating-ஆ இருக்கு. என்று அழுகிறார்.

இரண்டாவது புரோமோவில் அபிராமி கதறி அழுவதை பார்த்து அங்க வரும் முகேன் என்னவென்று கேட்க, சாக்ஷி பற்றி முகேனிடம் குற்றச்சாட்டு தெரிவிக்கிறார் அபிராமி. பின்னர் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற முகேன் கட்டிலை கையாளேயே உடைக்கிறார். 

தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் அடுத்த வார எலிமினேஷனுக்கா போட்டியாளர்கள் நாமினேஷன் செய்கிறார்கள். பெரும்பாலான போட்டியாளர்கள் லாஸ்லியாவை நாமினேட் செய்கின்றனர். அவருக்கு Attitude காமிக்கிறார்  என்பது போட்டியாளர்களின் குற்றச்சாட்டு.

BIGG BOSS 3: ''எல்லா தெரிஞ்சும் முகேனும்...'' - சாக்ஷியால் அபிராமியை தவிர்க்கும் முகேன் வீடியோ