'சாண்டி Bigg Boss-ன் உள்ளே வெளியே...' - பிரபல ஹீரோ கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அடங்க மறு படத்துக்கு பிறகு ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வரும் படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க, ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Jayam Ravi Speaks about Sandy in Kamal Haasan's Bigg Boss

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் ஒளியும், ஒலியும் என்ற பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார்.

தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் கோமாளி படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது சாண்டி குறித்து பேசிய அவர்,  சாண்டி ரொம்ப ஜாலியான ஆளு. சாண்டியை கலா மாஸ்டரிடம் இருக்கும் போதே தெரியும்.

சாண்டி தான் எனக்கு சொல்லிக் கொடுப்பாரு. நானே கேட்பேன் சாண்டி தான் எனக்கு சொல்லிக்கொடுக்கணும்னு. இப்போ பிக்பாஸ் பார்க்க முடியல. ஆனா சாண்டி எப்பவும் போல தான் இருப்பாரு. ஏனெனில், அவருக்கு வேற மாதிரி இருக்க தெரியாது. ரொம்ப வெகுளி என்று தெரிவித்தார்.

'சாண்டி BIGG BOSS-ன் உள்ளே வெளியே...' - பிரபல ஹீரோ கருத்து வீடியோ