"இத போட மாட்டோம்னு சொல்லிட்டாங்க.." - தர்ஷனுக்கு Birthday Wish சொன்ன சனம் ஷெட்டி வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 16, 2019 12:37 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை பல்வேறு சண்டைகள், கருத்து மோதல்கள், காதல் கிசுகிசு என அனைத்து சுவாரஸ்யங்களும் இடம்பெற்ற நிலையில், இறுதி போட்டிக்கு போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் 80 நாட்களை கடந்த நிலையில், மக்களின் விருப்பமான போட்டியாளரான தர்ஷன் நேற்றைய எபிசோடில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். சாக்லெட் கேக்குடன் பெரிய க்ரீட்டிங் கார்ட் ஒன்றும் தர்ஷனுக்கு பிறந்தநாள் கிஃப்ட்டாக வழங்கப்பட்டது. அனைத்திலும், ஹைலைட்டாக அமைந்தது Happy Birthday சிஷ்யா என பிக் பாஸ் தனது கம்பீர குரலால் வாழ்த்திய தருணம்.
இந்நிலையில், தர்ஷனின் காதலியும், மாடலுமான சனம் ஷெட்டி தர்ஷனின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘காக்கும் கரங்கள்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி தர்ஷனின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவுடன், அவர் பகிர்ந்துள்ள குறிப்பில், இதனை எந்த ஒரு விளம்பரத்திற்காகவும் தான் செய்யவில்லை என்றும், தர்ஷன் மீது குழந்தைகளின் மனமார்ந்த வாழ்த்துக்கள் தான். இந்த வீடியோவை விஜய் டிவிக்கு அனுப்பி ஒளிபரப்புமாறு கேட்டதற்கு, அவர்கள் இந்த வீடியோவில் நான் இருப்பதால் ஒளிபரப்ப மறுத்துவிட்டனர். குழந்தைகளுடனான பிறந்தநாள் கொண்டாட்டத்தை தர்ஷன் மிஸ் செய்துவிட்டார்’ என சனம் ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் மற்றும் ஷெரின் இடையே துளிர்த்த காதல் பெரிய விவாத பொருளாக மாறிய நிலையில், தர்ஷனின் வாழ்க்கையில் இருந்து விலகுவதாகவும், அவரது சந்தோஷம் தான் தனக்கு முக்கியம் என தன்னுடைய காதலை விட்டுக் கொடுப்பதாக சனம் ஷெட்டி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.