'தலைவர் பராக் !' - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' படத்தில் இருந்து வெளியான வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பேட்ட' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

AR Murugadoss posted a Video of Rajinikanth, Nayanthara, Anirudh's Darbar

சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'தர்பார்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

'தலைவர் பராக் !' - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' படத்தில் இருந்து வெளியான வீடியோ வீடியோ