'நீ பிரிந்தால் நான் இறப்பேன்...' - கவினுக்கு கண்ணீரால் பிரியா விடை கொடுத்த லாஸ்லியா!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 26, 2019 03:44 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எவிக்ஷனுக்கு முன்பாகவே கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற காட்சிகள் புரொமோ வீடியோக்களில் இடம்பெற்றன.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சேரன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இந்த வாரம் எவிக்ஷனுக்கு ‘கோல்டன் டிக்கெட்’ பெற்ற முகெனை தவிர அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோவில், ரூ.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம் என பிக் பாஸ் கூற, சிறிதும் யோசிக்காமல் கவின் அந்த டாஸ்கை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நேற்றைய நிகழ்ச்சியில் கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில், இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் இரண்டு புரொமோ வீடியோவில், சாண்டியும், லாஸ்லியாவும் கவினின் பிரிவால் வாடும் காட்சிகள் இடம்பெற்றன.
தற்போது அதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள புரொமோ வீடியோவில், கவின் தனது பொருட்களை பேக் செய்துக் கொண்டு, லாஸ்லியாவிடம் கை குழுக்கி பிரிவதும், கவினை வழியனுப்ப மனமின்றி அவர்களது ஆஸ்தான இடமான சிவப்பு கதவின் இடுக்கில் கை வைத்து லாஸ்லியா நசுக்கி கொள்ளும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இவர்களது காதல் பிக் பாஸின் 100 நாட்களுக்கு பிறகும் இதேபோல் துளிர்விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
'நீ பிரிந்தால் நான் இறப்பேன்...' - கவினுக்கு கண்ணீரால் பிரியா விடை கொடுத்த லாஸ்லியா! வீடியோ