உங்கள கேட்டேனு சொல்ல சொன்னார் சிம்பு - பிக்பாஸில் கவினிடம் கூறிய மஹத்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 25, 2019 11:46 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான யாஷிகாவும் மஹத்தும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடினர். அவர்களுக்கு தங்கள் அறிவுரைகளை வழங்கினர்.

பின்னர் இருவரும் இணைந்து நடித்த இவன் தான் உத்தமன் படத்தின் டீஸரை பிக்பாஸ் வீட்டில் இருந்தபடி வெளியிட்டனர். அதனை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
மஹத் உள்ளே வந்த போது சாண்டி தலைவன் கெட்டப் போட்டு பண்ணிட்டு இருந்தோம் என்று சிம்பு குரலில் மிமிக்கிரி செய்து காட்டுகிறார். அதனைக் கேட்ட மஹத் பார்த்தேன் நல்லா இருந்தது. என்றார்.
மேலும்,சாண்டியிடம் ''பெர்சனலா சாண்டியை கேட்டேனு சொல்லு'' என்று சிம்பு சொன்னதாக மஹத் தெரிவிக்கிறார். அதனைக் கேட்ட சாண்டி தலைவன் என்னை கேட்டாராம் என்று கவினிடம் மகிழ்ச்சியாக தெரிவித்தார். பின்னர் கவினிடம் பேசிய மஹத், உங்களை கேட்டேனு சொல்ல சொன்னார் சிம்பு'' என்றார்.