ஷெரினின் லெட்டரை திருட்டுத்தனமாக படித்த தர்ஷன் - கவினும் சாண்டியும் கலாய்க்க ஷெரின் கோபம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 25, 2019 09:45 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழச்சியில் நேற்றைய தினம் (செப்டம்பர் 24) மஹத் மற்றும் யாஷிகா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் உரையாடினர்.

பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'இவன் தான் உத்தமன்' படத்தின் டீஸரை அங்கு வெளியிட்டனர். பின்னர் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாரு ஒரு கிஃப்ட் கொடுத்தனர். அதன் ஒரு பகுதியாக ஷெரினிடம் பேப்பர் பேனாவைக் கொடுத்து 'உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்' என்று பிக்பாஸ் கூறினார்.
பின்னர் ஷெரின் கடிதம் எழுதினார். அப்போது அதனை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு யாஷிகா மற்றும் மஹத்தை பிக்பாஸ் கேட்டுக்கொண்டார். அதனைக் கேட்ட ஷெரின் உடனே கிழித்து தனது பாக்கெட்டிற்குள் வைத்துக்கொண்டார்.
இதனையடுத்து அந்த கடிதத்தில் என்ன இருக்கும் என்ற ஆர்வத்தில் தர்ஷன் குப்பைக் கூடையை கிழறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது விஜய் டிவி இன்றைய நாளுக்கான முதல் புரோமோவை ஒளிபரப்பியது. அதில், கவின், 'ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம்' என்ற பாடலை பாட, வெட்கத்தில் இருக்கும் ஷெரின் தர்ஷனை பார்த்து செல்லமாக கோபித்துக்கொண்டார்.
அப்போது தர்ஷனிடம் உனக்கு அந்த லெட்டர்ல என்ன இருக்கும்ணு தெரிஞ்சுக்கணும்னா என் கிட்ட கேட்கவேண்டியது தானே என்றார். அதற்கு சாண்டி ஷெரினை கலாய்க்க, ஷெரின் செல்ல கோபம் காட்டுகிறார்.
ஷெரினின் லெட்டரை திருட்டுத்தனமாக படித்த தர்ஷன் - கவினும் சாண்டியும் கலாய்க்க ஷெரின் கோபம் வீடியோ