பிக்பாஸில் இருந்து வெளியேறுவதற்கு கவின் சொல்லும் காரணம் என்ன?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 26, 2019 10:03 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் டாஸ்க்கில் வெற்றி பெற்றதற்கு பிக்பாஸ் மன்னர் டாஸ்க் கொடுத்தார். மற்ற போட்டியாளர்கள் அவருக்கு பணிவிடைகள் செய்தனர். இந்நிலையில் சிறிது நேரத்தில் மன்னர் டாஸ்க் முடிவடைவதாகவும் தர்ஷன் மற்ற போட்டியாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கலாய்த்தார்.

அதனால் மற்ற போட்டியாளர்கள் என் காலை அழுத்திவிடு, என்னைத் தூக்கி சுற்று என்று ஜாலியாக தர்ஷனுக்கு வேலைகள் சொல்லிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து விருந்தினர்களாக உள்ளே வந்த ஜனனியும், ரித்விகாவும் தங்களது படங்களான 'வேழம்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு' படங்களின் போஸ்டர்களை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் இந்த வாரம் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம். இறுதியில் ஒருவர் மட்டுமே டைட்டில் 50 லட்சம் பெற முடியும் என்று கூறினார். மேலும், 5 லட்சம் தந்து இதனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு வெளியே செல்லலாம் என்று பிக்பாஸ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பு வந்ததும் கவின் எழுந்தார். அதனோடு நேற்று நிகழ்ச்சி முடிந்தது. அவர் உண்மையில் வெளியே செல்கிறாரா இல்லையா என்று மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இன்று (September 26) ஒளிபரப்பான முதல் புரோமோவில் கவினிடம் சாண்டி, 'நீ ஏன் இப்போ வெளியே போணும்னு சொல்ற ? என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் கவின், 'உன்கிட்ட கடைசியா நல்லா பேசி எவ்ளோ நாளாகுது. இது ஒரு கேம். கேமா மட்டும் பாரு. பத்தே நாளுல முடிச்சுட்டு வெளியே வாங்க மீட் பண்ணலாம். இவ்ளோத்தையும் பண்ணிட்டு கூச்சமே இல்லாம மேடையேறி வந்து என்னால நிக்க முடியாதுனே'' என்கிறார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறுவதற்கு கவின் சொல்லும் காரணம் என்ன? வீடியோ