www.garudabazaar.com

கதிரவனுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்த Guest.. மனுஷன் நம்பவே இல்லையே.. நெகிழ்ச்சி தருணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

Kathiravan surprise guest inside bigg boss house emotional

Also Read | நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் G.P. முத்து?.. அவரே சொன்ன பதில்!

இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

Kathiravan surprise guest inside bigg boss house emotional

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

Kathiravan surprise guest inside bigg boss house emotional

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது.

இந்த நிலையில், கதிரவனுக்காக சர்ப்ரைஸாக பிக் பாஸ் வீட்டில் ஒருவர் வருகை தந்துள்ளது தொடர்பான விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

Kathiravan surprise guest inside bigg boss house emotional

கதிரவன், விக்ரமன் மற்றும் அசிம் உள்ளிட்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் இனி வர வேண்டி உள்ளது. அப்படி ஒரு சூழலில் தான், கதிரவனுக்காக அவரது தாயார் வருகை புரிந்துள்ளார். அதே போல, கதிரவனை பார்க்க பெண் ஒருவரும் சர்ப்ரைஸாக பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளதாக தெரிகிறது. இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கதிரவன், கண் கலங்க, "நான் வருவதை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்" என்றும் அந்த பெண் குறிப்பிடுகிறார். இதனைத் தொடர்ந்து, அவர்களுடன் சேர்ந்து நடனமாடவும் செய்கிறார் கதிரவன்.

Also Read | "அவரோட Friend-ஆ பழகு".. மணிகண்டாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த அட்வைஸ்..!

தொடர்புடைய இணைப்புகள்

Kathiravan surprise guest inside bigg boss house emotional

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kathiravan, Kathiravan surprise, Vijay Television, Vijay tv will find this news story useful.