www.garudabazaar.com

ஒருத்தர் தொழிலை குறிப்பிட்டு கிண்டலா? அசிம் குறித்த கமலின் கருத்து! bigg boss 6 tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Kamal haasan latest comments on Azeem bigg boss 6 tamil

இதில் பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த வார சொர்க்கவாசிகள் Vsநரகவாசிகள் டாஸ்க் இன்னும் சூடுபிடித்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, வைல்டு கார்டு எண்ட்ரியில் மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.  கடைசிவாரத்தில் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஜனனி எலிமினேஷனுக்கு முன்னதாக அசிம் குறித்து பேசிய கமல்,  “ஒருவரின்  தொழிலைக் குறிப்பிட்டு கிண்டல் செய்வதை நீங்கள் ஒரு பழக்கமா வைத்துள்ளீர்கள். அது இங்கே வேண்டாம். மணிகண்டா சொன்ன மாதிரி நாம ஏன் ஒரு ‘சுமூகமான சமூகமா இருக்கக்கூடாது?’ என்று குறிப்பிட்டார்.

முன்னதாக  ஷிவின் மற்றும் விக்ரமனை முறையே சுட்டிக் காட்டிய அசிம்,  ‘Vibrant Scene Creator’, ‘Silent Scene Creator’ என குறிப்பிட்டு அவர்கள் குறித்த தமது கருத்துக்களை கமல்ஹாசன் முன்பாக முன்வைத்தார். அதன் பிறகே அசிம் குறித்த மேற்கூறிய கருத்தை கமல்ஹாசனும் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal haasan latest comments on Azeem bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil promobigg boss 6 tamil contestants listbigg boss tamil, Bigg boss tamil 6bigg boss season 6vijay tvbigg boss tamil promo, Bigg boss tamil 6bigg boss tamil season 6bigg boss tamil 6 contestantsrachitha mahalakshmi will find this news story useful.