www.garudabazaar.com

"என்னது? அமுதவாணனோட ஒரு நாளைய சம்பளம் இவ்ளோவா?".. பரபரப்பாகும் டிஸ்கஷன்! bigg boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Amudhavanan One day Salary in bigg boss 6 tamil housemates

Also Read | ரீ ரிலீஸ் ஆகும் விஜய், ஜோதிகா நடித்த குஷி படத்தின் தெலுங்கு ரீமேக்.! SJ சூர்யா ட்வீட்  

இதில் பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த வார சொர்க்கவாசிகள் Vsநரகவாசிகள் டாஸ்க் இன்னும் சூடுபிடித்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, வைல்டு கார்டு எண்ட்ரியில் மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

Amudhavanan One day Salary in bigg boss 6 tamil housemates

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.  கடைசிவாரத்தில் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் தற்போது 71வது நாள் நேற்று தொடங்கியது.

Amudhavanan One day Salary in bigg boss 6 tamil housemates

இதில்தான் அமுதவாணனின் சம்பளம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. 2விஜய் டிவி அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருந்தவர் அமுதவாணன். அண்மையில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் கடைசி சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டுள்ளார்.

Amudhavanan One day Salary in bigg boss 6 tamil housemates

இதில் பேசும் மணிகண்டாவும், அசிமும், “எப்படியும் அமுதவாணன் ஒரு நாளைக்கு 1 ரூவா (1 லட்சம் ரூபாய் என்பதை குறிப்பிடுவதாக இருக்கலாம்)சம்பளம் வாங்குவாப்ல. இப்ப 70 நாள் ஆயிடுச்சு.. டாஸ்க்க தவிர,  லம்ப்பா இவ்ளோ அமௌண்ட் வந்துடும்.” என்றும்  குறிப்பாக, “டைட்டில் வின்னரா ஒருத்தர் அடிக்குற காசுக்கு மேலயே அவருக்கு காசு வந்துடும்” என கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் கேட்ட அமுதவாணன், பிக்பாஸ் கேமராவை பார்த்து “இதெல்லாம் பொய் .. நம்பாதீங்க” என ‘ஆதவன்’ படத்தில் வடிவேலு அழாத குறையாக சொல்வது போலவே ரியாக்‌ஷன் கொடுத்துக் கொண்டிடுருந்தார்.

Also Read | “40 வருடம் கழிச்சுதான் எனக்கே தெரியுது”.. வனிதாவின் உறவினரா இந்த நடிகை? அவரே சொன்ன உண்மை..

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan One day Salary in bigg boss 6 tamil housemates

People looking for online information on Amuthavaanan, Amuthavanan, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil will find this news story useful.